ஆண்டு சராசரி மழை அளவை விட நடபாண்டில் 119.24 மில்லி மீட்டர் அதிகம் பெய்துள்ளது.விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தகவல்
Karur King 24x7 |28 Dec 2024 3:43 AM GMT
ஆண்டு சராசரி மழை அளவை விட நடபாண்டில் 119.24 மில்லி மீட்டர் அதிகம் பெய்துள்ளது.விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தகவல்
ஆண்டு சராசரி மழை அளவை விட நடபாண்டில் 119.24 மில்லி மீட்டர் அதிகம் பெய்துள்ளது. விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தகவல். கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ம.கண்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு அரசால் விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வேளாண் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்து அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்ற அனைத்துத் திட்டங்களையும் வேளாண் பெருமக்களுக்கு முழுமையாகக் கொண்டு சேர்ப்பதுடன் விவசாயிகளின் குறைகளை அனைத்துத் துறை அலுவலர்கள் அறிந்து நிவர்த்தி செய்யும் வகையில் மாதந்தோறும் இதுபோன்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகின்றன. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தெரிவிக்கும் போது, கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் போதுமான அளவில் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், யூரியா 1760 மெட்ரிக் டன்னும், டிஏபி 350 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 1434 மெட்ரிக் டன்னும், என்.பி.கே. 1353 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 4897 மெ.டன் இரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் நெற்பயிர் சாகுபடிக்காக CO50, CR50, ADT 53, ADT 54, TKM 13, CR 1009 உள்ளிட்ட ஆகிய நெல் ரகங்கள் 4 மெட்ரிக் டன்னும், சிறுதானியங்கள், கம்பு - கோ 10, சோளம் Co32, K12, ஆகியவை 39 மெட்ரிக் டன்னும், பயிறு வகை பயிர்கள், உளுந்து - VBN-8 &. VBN - 10, கொள்ளு பையூர் - 2, ஆகியவை 8 மெட்ரிக் டன்னும் மற்றும் எண்ணெய் வித்துக்கள், நிலக்கடலை தரணி -கோ-6, கோ-7, டி.எம்.வி - 14, எள்- டிஎம்.வி - 7 ஆகியவை 3 மெட்ரிக் டன்னும் இருப்பில் உள்ளது. கரூர் மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழை அளவு 652.20 மி.மீ ஆகும். நடப்பு ஆண்டு டிசம்பர் 2024 வரை 771.44 மி.மீ மழை பெய்துள்ளதென மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தெரிவித்தார். இக்கூட்டத்தில், குளித்தலை சார் ஆட்சியர் சுவாதிஶ்ரீ, வேளாண்மை இணை இயக்குநர் சிவானந்தம், கூட்டுறவு சங்ககளின் இணைப்பதிவாளர் கந்தராஜா, கால்நடை பராமரிப்புத்துறையின் இணை இயக்குநர் சாந்தி, வேளாண் துறை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் உமா, சமுகபாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் பிரகாசம், மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஸ் கரூர் வருவாய் கோட்டாட்சியர் முகமதுபைசல், உதவி ஆணையர் கலால் கருணாகரன், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் பச்சமுத்து உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.
Next Story