ஆரணி அருகே வீட்டில் 12சவரன் நகைகளை திருடிய வாலிபர் கைது.

X
ஆரணி அடுத்த நேத்தபாக்கம் கிராமத்தில் சின்னக்குழந்தை மகன் சண்முகம் என்பவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வீட்டில் இல்லாதபோது அடையாளம் தெரியாத நபர் வீட்டினுள் புகுந்து 12சவரன் நகைகளை திருடியுள்ளார். இது குறித்து சண்முகம் ஆரணி கிராமிய போலீஸில் புகார் கொடுத்திருந்தார். இந்நிலையில் இரும்பேடு பகுதியில் குப்பைகளை அள்ளுவதுபோல் சந்தேகத்தின் பேரில் ஒருவர் சுற்றிக்கொண்டிருக்கிறார் என்று ஆரணி கிராமிய போலீஸாருக்கு தகவல் கிடைத்ததின்பேரில் இரும்பேடு பகுதிக்கு சென்று குப்பை அள்ளுவது போல் நடமாடிக்கொண்டிருந்த வாலிபரிடம் விசாரணை செய்ததில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தான். இதனால் போலீஸார் ஆரணி கிராமிய காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை செய்தனர். அப்போது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நேத்தபாக்கம் கிராமத்தில் 12 சவரன் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டான். மேலும் வாலாஜாபேட்டை சேர்ந்த ரேணுகோபால் மகன் வெங்கடேஷ்(32) என்று தெரியவந்தது. பின்னர் வெங்கடேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story

