திருப்பத்தூர் அருகே வயிற்று வலி காரணமாக 12ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை

திருப்பத்தூர் அருகே வயிற்று வலி காரணமாக 12ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை
X
கொடுமாம்பள்ளி பகுதியில் வயிற்று வலி காரணமாக 12ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை
திருப்பத்தூர் மாவட்டம் கொடுமாம்பள்ளி பகுதியில் வயிற்று வலி காரணமாக 12ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கொடுமாம்பள்ளி பகுதியைச் சேர்ந்த தேவராஜ் மகன் யுவன் ஸ்ரீ (17) இவர் பொம்மிகுப்பம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில் யுவன் ஸ்ரீ கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதி உற்று வந்ததாக தெரிகிறது இந்த நிலையில் வயிற்று வலி அதிகமாகவே மனம் உடைந்த மாணவன் வீட்டின் ஓர் தனி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் காலையில் எழுந்து கதவு பூட்டுப்பட்டிருந்ததை அறிந்த பெற்றோர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் திருப்பத்தூர் கிராமிய போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வயிற்று வலியின் காரணமாக பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது…
Next Story