காஞ்சிபுரத்தில் விதைகள்' அமைப்பின் 12ம் ஆண்டு விழா
Kanchipuram King 24x7 |3 Jan 2025 3:44 AM GMT
விதைகள்' தன்னார்வ அமைப்பின் 12ம் ஆண்டு துவக்க விழா மற்றும் நான்காம் ஆண்டு 1 லட்சம் பனை விதை நடவு நிறைவு விழா
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 'விதைகள்' தன்னார்வ அமைப்பின் 12ம் ஆண்டு துவக்க விழா மற்றும் நான்காம் ஆண்டு 1 லட்சம் பனை விதை நடவு நிறைவு விழா, நடந்தது. ஒரகடம் அருகே திருவேணி அகாடமியில் நடந்த விழாவில், இந்திய கடற்படை கமாண்டர் இளந்தமிழ், மூத்த இயற்கை ஆர்வலர் சோழன் மற்றும் முல்லைவனம் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.விழாவில், ஆதி கல்லுாரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், திருவேணி அகாடமி தேசிய பசுமைப்படை மாணவர்கள், எஸ்.ஆர்.எம்., பல்கலை நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் மற்றும் விதைகள் அமைப்பின் தன்னார்வ அமைப்பினர் உட்பட, 400 பேருக்கு விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து, விதைகள் தன்னார்வ அமைப்பின் ஆண்டு மலர் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில், ஏராளமான மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள், விதைகள் அமைப்பின் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
Next Story