குமரியில் 12 மணிக்கு பின்பு படகு போக்குவரத்து துவக்கம்
Nagercoil King 24x7 |18 Jan 2025 12:19 PM GMT
கன்னியாகுமரி
சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள். பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்துவிட்டு திரும்புவது வழக்கம். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளையின்றி படகுகளை இயக்கி வருகிறது. இன்று 18 - ம் தேதி வழக்கம் போல் காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து நீர் மட்டம் தாழ்வு மற்றும் கடலில் சூறை காற்று காரணமாக 4 மணி நேரம் தாமதமாக தொடங்கியது. 12 மணியளவில் கடலில் சூறை காற்று ஓரளவு குறைந்து சகஜ நிலை காணப்பட்டதைத் தொடர்ந்து,படகு சேவை தொடர்ந்து நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்த்துவிட்டு திரும்பினர். நேற்று 17-ம் தேதி படகு சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story