குமரி: ஆலயத்தில் கோஷ்டி முதல் 12 பேர் மீது வழக்கு

X
குமரி மாவட்டம் குறும்பனை கடற்கரை கிராமத்தில் உள்ள அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் சூசை மகன் சகாய ஜின் (36). இவர் குறும்பனை ஆலய பங்கு உறுப்பினராக உள்ளார். கடந்த கிறிஸ்மஸ் பண்டிகை விழாவின் போது அப்பகுதியை சேர்ந்த சகீனுக்கும் சஜின், அபி, அசின் ஆகியோருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் சகாயஜின் ஒரு தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக தெரிகிறது. நாளடைவில் இது இருதரப்புக்கும் மோதலாக மாறியது. இந்த நிலையில் சம்பவ தினம் ஆலயத்தின் பங்கு பணியாளர் வீட்டு முன்பு இரு தரப்பினருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர். இந்த தாக்குதலில் காயமடைந்த சகாய ஜின் குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியிலும், மற்றொரு தரப்பை சேர்ந்த ஆன்சோ உள்ளிட்டோர் குளச்சல் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து இரு தரப்பினரும் குளச்சல் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் இருதரப்பை சேர்ந்த 12 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

