என் ஜி சி நிறுவனம் சி எஸ் ஆர் திட்டத்தின் கீழ் 12 மாற்றுத்திறனாளி நபர்கள் தொழில் செய்வதற்கான கடைகள் கடை நடத்த தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது

என் ஜி சி நிறுவனம் சி எஸ் ஆர் திட்டத்தின் கீழ் 12 மாற்றுத்திறனாளி நபர்கள் தொழில் செய்வதற்கான கடைகள் கடை நடத்த தேவையான பொருட்கள் மற்றும் நிதி மேலாண்மை விற்பனை முறை குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டது
விருதுநகர் மாவட்டத்தில் மாறுபட்ட திறன் கொண்ட நபரை மேம்படுத்துவதற்கான நிலையான வாழ்வாதார அதிகார திட்டம் சிறகுகள் இரண்டு வாழ்வாதார திட்டத்தின் கீழ் பல்வேறு தொழில்கள் நடத்துவதற்காக ஓ என் ஜி சி நிறுவனம் சி எஸ் ஆர் திட்டத்தின் கீழ் 12 மாற்றுத்திறனாளி நபர்கள் தொழில் செய்வதற்கான கடைகள் கடை நடத்த தேவையான பொருட்கள் மற்றும் நிதி மேலாண்மை விற்பனை முறை குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டது அதைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட கடை திறப்பு விழா விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கடம்பன்குளம் பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் அவர்கள் மாற்று திறனாளிகளுக்கான கடைகளை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் அவர்கள் பேசுகையில் விருதுநகர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பெண்கள் மகளிர் சுய உதவி குழுக்களில் இருப்பதாகவும் விருதுநகர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் 8 லட்சம் பேர் இருப்பதாகவும் ஆனால் மகளிர் குழுவில் ஒரு லட்சத்து 10ஆயிரம் பெண்கள் மட்டுமே இருப்பதாகவும் மகளிர் குழுவில் உள்ள பெண்களுக்கு ஆண்டுதோறும் 900 கோடி ரூபாய் அரசு கடனாக வழங்குவதாகவும் அதன் மூலமாக கடன் பெறும் பெண்களில் 50 சதவீத பெண்கள் தான் தொழில் செய்துவதாகவும் மீதமுள்ள பெண்கள் கடன் வாங்கி வேறு செலவுகளை செய்வதாகவும் பெண்களுக்கு நிறைய வழிமுறைகள் இருப்பதாகவும் முயற்சி செய்து வந்தால் அவர்கள் தங்களுக்கான வருமானத்தை பெருக்கிக் கொள்ளலாம் என்றாலும் கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் ஏதேனும் ஒரு சிறிய தொழிலை கற்றுக்கொண்டு தனி நபராகவோ குழுக்களாக இணைந்து கொண்டு அவர்கள் வாழ்க்கை தைரியத்தை உயர்த்த வேண்டும் பெண்களுக்கான சுதந்திரம் என்பதும் அதிகாரம் என்பதும் என்பதும் பெண்களுக்கு கையில் இருக்கும் பணம்தான் பலம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் பேசினர்
Next Story