சேலம் மாநகராட்சி பகுதியில் ரூ.12½ கோடியில் வளர்ச்சி பணிகள்

X

ஆணையாளர் இளங்கோவன் ஆய்வு
சேலம் மாநகராட்சி 17-வது வார்டுக்குட்பட்ட அழகாபுரம் பகுதியில் ரூ.8 கோடியில் சாக்கடை கால்வாய் கட்டப்பட்டு உள்ளது. இதை மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். தொடர்ந்து 14-வது வார்டுக்குட்பட்ட செரி ரோட்டில் ரூ.3 கோடியே 65 லட்சத்தில் வடிகால் அமைக்கும் பணியை பார்வையிட்டார். அதேபோன்று அம்மாப்பேட்டை மண்டலம் 37-வது வார்டில் ரூ.73 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி உள்ளிட்ட மாநகராட்சி பகுதியில் ரூ.12½ கோடியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வில் துணை ஆணையாளர் பாலசுப்பிரமணியன் உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story