வெள்ளத்திடல் மகா காளியம்மன் கோயில் குடமுழுக்கு நடத்தி 12 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு

வெள்ளத்திடல் மகா காளியம்மன் கோயில் குடமுழுக்கு நடத்தி 12 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு
X
கோபுரங்கள், மண்டபங்கள், தரைத்தளம் ஆகிய பகுதிகளில் பாலாலய பூஜை
நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிக்குட்பட்ட வெள்ளத்திடல் கிராமத்தில், மகா காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், 12 ஆண்டுகளுக்கு முன் குடமுழுக்கு நடத்தப்பட்டது. 12 ஆண்டுகள் நிறைவடைந்தது. அதை முன்னிட்டு, குடமுழுக்கு நடத்த கோவில் நிர்வாகமும், கிராம மக்களும் முடிவு செய்தனர். முதற்கட்டமாக, மூலவர் கோபுரம் திருப்பணி செய்வதற்காக பாலாலயம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று பாலாலய பூஜைகள் தொடங்கி யாகசாலை பூஜை நடைபெற்றது. இதில், பரிவார தெய்வங்களின் சன்னதி கோபுரங்களுக்கு பாலாலயம் செய்யப்பட்டது. இதையடுத்து, கோபுரங்கள், மண்டபங்கள், தரைதளம் உள்ளிட்ட கோவிலின் பல்வேறு இடங்களை புனரமைக்கும் பணி நடைபெற்றது. சாமிகளுக்கு பாலாலயம் செய்யப்படாததால் மகா காளியம்மன், முருகன், விநாயகர், வீரன், பெரியநாயகி உள்ளிட்ட அனைத்து சாமிகளையும் பக்தர்கள் வழிபாடு செய்யலாம் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Next Story