கருங்கல் :  மாயமான 12 வயது சிறுமி மீட்பு

கருங்கல் :  மாயமான 12 வயது சிறுமி மீட்பு
X
வாலிபருக்கு போக்சோ
குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 12 வயதான மாணவி அந்த பகுதியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். சம்பவ தினம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்திற்கு ஆதார் கார்டு வாங்குவதற்காக சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை.  மாணவியின்  தாயார் கருங்கல் காவல் நிலையத்தில் புகார்  அளித்தார். போலீசார் மாணவியின் செல் போன் நம்பரை வைத்து விசாரித்த போது மாணவி கோயம்புத்தூர் பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.       அங்கு சென்ற போலீசார் மாணவியுடன் ஒரு வாலிபரையும்  பிடித்து விசாரித்தனர்.  விசாரணையில் அந்த வாலிபர் திருநெல்வேலி பகுதி சேர்ந்த சகாயராஜ் என்பதும், தற்போது நாகர்கோவில் பகுதியில் வசித்து வருவதும், நாகர்கோவிலில் ஒரு தனியார் பள்ளியில் டிரைவராக வேலை செய்வதும்  தெரிய வந்தது. குமரி அரசு மருத்துவ கல்லூரியில் சகாயராஜ் சிசிட்சையில் இருந்த நேரம், மாணவியும் அங்கு சென்ற போது பழக்கம் ஏற்பட்டதும் தெரிந்தது. இந்த நிலையில்  சகாயராஜ் மாணவியை கடத்தி சென்றுள்ளார். போலீசார் அவரை போக்சோ  சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இது சம்பந்தமாக குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story