கோவை: ஜூலை 12-ல் ஸ்டார்ஸ் நைட் அவுட் !

கோவை: ஜூலை 12-ல் ஸ்டார்ஸ் நைட் அவுட் !
X
கோவையில் ஜூலை 12 அன்று நடைபெற உள்ள Play On - ஸ்டார்ஸ் நைட் அவுட் எனும் கலை நிகழ்ச்சிக்கான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
கோவையில் ஜூலை 12 அன்று நடைபெற உள்ள Play On - ஸ்டார்ஸ் நைட் அவுட் எனும் கலை நிகழ்ச்சிக்கான செய்தியாளர் சந்திப்பு கோவை லீ மெரிடியன் ஹோட்டலில் நேற்று இரவு நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை கீர்த்தி ஷெட்டி, கோவைத் தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்தார். தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருவதாகவும், மக்கள் நல்ல ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கையும் உள்ளதாக கூறினார். இந்த நிகழ்ச்சியில் தமன்னா, ஓவியா, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். ஹரிஷ் ராகவேந்திரா, சிவாங்கி உள்ளிட்ட இசைக் கலைஞர்களின் நிகழ்ச்சிகளும் இடம்பெறும். மேடை ஒளி, ஒலி தொழில்நுட்பம், DJ இசை உள்ளிட்ட பல சிறப்பம்சங்களுடன் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. டிக்கெட்டுகள் ரூ.599 முதல் BookMyShow உள்ளிட்ட தளங்களில் கிடைக்கும் என அக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Next Story