ஜெயங்கொண்டம் அருகே துள்ரங்குறிச்சியில் ஆக.12 ந்தேதி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்*

ஜெயங்கொண்டம் அருகே துள்ரங்குறிச்சியில் ஆக.12 ந்தேதி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்*
X
ஜெயங்கொண்டம் அருகே துள்ளாரங்குறிச்சியில் ஆக.12 ந்தேதி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற உள்ளதால் துளாரங்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அரியலூர், ஆக.11. - ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட துளாரங்குறிச்சி ஊராட்சியில் சூரியமணல் கிராமத்தில் உள்ள கவிதா திருமண மஹால் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை ஆக 12 ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. முகாமில் 16 துறைகளில் 46 சேவைகளுக்கான விண்ணப்பங்கள் தன்னார்வலர்கள் மூலம் தாங்கள் இருப்பிடத்திற்கே வினியோகம் செய்யப்பட்டுள்ளது எனவே துமாறங்குறிச்சி உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து முகாமில் வழங்கி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் மேலும் முகாம் நடைபெறும் இடத்திலேயே கலைஞர் உரிமைத்தொகைக்கான விண்ணப்ப படிவத்தினை பெற்று விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் முகாமில் பொதுமக்கள் நலன் கருதி மருத்துவ முகாம்களும் நடைபெறுகிறது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க சொ.க.கண்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்..
Next Story