நிலத்தகராறில் விவசாயியை தாக்கிய 12 பேர் மீது வழக்கு

X
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா விளாம்பட்டி அருகே உள்ள எத்திலோடு கிராமத்தைச் சேர்ந்த பாண்டி (வயது 50). விவசாயியான இவர் அதே ஊரைச் சேர்ந்த பால்ராஜ் மனைவி மூக்கம்மாள் என்பவரிடம் ஒரு காலி மனை இடத்தை வாங்கி உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்னச்சாமி, ஈஸ்வரி, பாலகுமாரன், பாலமுருகன், சின்ன பாண்டியம்மாள், சின்னப்பாண்டி உட்பட 12 பேர் பாண்டி மற்றும் அவரது மனைவி 5 சின்னத்தாயை தாக்கி காயப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாக நிலக்கோட்டை மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் . புகார் செய்தார். கோர்ட்டு உத்தரவுப்படி விளாம்பட்டி 5 போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராம்சேட் 12 பேர் மீது வழக்கு - பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
Next Story

