பென்காசிலாட் தேசிய போட்டிக்கு கரூர் மாவட்டத்தை சேர்ந்த 12 பேர் தேர்வு செய்தவர்களை வழி அனுப்பும் விழா

பென்காசிலாட் தேசிய போட்டிக்கு கரூர் மாவட்டத்தை சேர்ந்த 12 பேர் தேர்வு செய்தவர்களை வழி அனுப்பும் விழா
பென்காசிலாட் தேசிய போட்டிக்கு கரூர் மாவட்டத்தை சேர்ந்த 12 பேர் தேர்வு செய்தவர்களை வழி அனுப்பும் விழா. விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 30, 31 தேதிகளில் தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான நவீன தற்காப்பு கலையான பென்காசிலாட் விளையாட்டு போட்டிகளில், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிச்சாஸ் அகாடமி வீரர், வீராங்கனிகள் 15 பேர் பங்கேற்றனர். இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய 12 வீரர், வீராங்கனிகள் தேசிய அளவிலான போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வரும் செப்டம்பர் 26, 27, 28 ஆகிய தேதிகளில் கர்நாடக மாநிலம் கோபால் பகுதியில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் இவர்கள் பங்கேற்க உள்ளனர். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த வீரர்கள் வெற்றி பெற்று மாவட்டத்திற்குப் பெருமை சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் பெற்றோர் அவர்களை இன்று கரூர் பேருந்து நிலைய வளாகத்தில் வாழ்த்தி வழியனுப்பினர்.
Next Story