காப்பகத்தில் இருந்த 12 வயது சிறுவன் மாயம்

காப்பகத்தில் இருந்த 12 வயது சிறுவன் மாயம்
X
குளச்சல்
குமரி மாவட்டம்  குளச்சல் அருகே உள்ள தனியார் காப்பகத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவன் தங்கியிருந்தார். நேற்று மதியம் உணவு சாப்பிட்டு விட்டு சென்ற சிறுவன் திடீரென காப்பகத்தில் இருந்து மாயமானார்.  தற்போது காலாண்டு விடுமுறை என்பதால்,  காப்பகத்தில் தங்கியிருந்த மற்ற மாணவர்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். ஆனால் இந்த சிறுவன் மட்டும் தனிமையில் இருந்துள்ளார். இதை பயன்படுத்தி சிறுவன் மாயமாகி விட்டதாக காப்பக வார்டன் மணி என்பவர் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.       போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சிறுவனை புகைப்படத்துடன் ரயில் நிலையம், பஸ் நிலையங்களில் தேடி உள்ளனர். ஆனால் சிறுவன் கிடைக்கவில்லை. இந்த சிறுவன் கடந்த ஆகஸ்ட் மாதம் ரயில் நிலையத்திலிருந்து மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டவர்  என்பது குறிப்பிட தகுந்ததாகும். சிறுவனின் தந்தை கூடங்குளத்தில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு சிறுவன் மாயமானது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story