உங்களுடன் ஸ்டாலின் திட்ட12 சிறப்பு முகாம் வாயிலாக 12,042 மனுக்கள்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட12 சிறப்பு முகாம் வாயிலாக  12,042 மனுக்கள்
X
உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் 15.07.2025 அன்று துவக்கி வைக்கப்பட்டு மாநிலம் முழுவதும் சிறப்புடன் நடைபெற்று வருகின்றன. பெரம்பலூர் மாவட்டத்திலும், 15.07.2025 அன்று முதல் சிறப்பு முகாம் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளைவழங்கினார்
பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட12 சிறப்பு முகாம் வாயிலாக 12,042 மனுக்கள் பெறப்பட்டுள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் தகவல். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் 15.07.2025 அன்று துவக்கி வைக்கப்பட்டு மாநிலம் முழுவதும் சிறப்புடன் நடைபெற்று வருகின்றன. பெரம்பலூர் மாவட்டத்திலும், 15.07.2025 அன்று முதல் சிறப்பு முகாம் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உரிய வழிகாட்டுதலின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் இதுவரை 12 முகாம்கள் நடைபெற்றது. இம்முகாம்களில் பொதுமக்கள் பல்வேறு தேவைகள், கோரிக்கைகள் வேண்டி 12,042 மனுக்கள் அளித்துள்ளனர். குறிப்பாக இதில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வேண்டி4,409 மனுக்கள் அளித்துள்ளனர். இம்மனுக்கள் அனைத்தும் இணையவழியாக பதிவேற்றம் செய்து தொடர்புடைய துறைகளுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் முகாம் நாள் அன்றே பல்வேறு விண்ணப்ப மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு வருகிறது. மேலும், இன்று (24.07.2025) நகர்புறம் பகுதிகளுக்கான முகாம் பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட 8,9,10,11 ஆகிய வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு அரியலூர் மெயின் ரோடு, பள்ளிவாசல் தெருவில் உள்ள கர்னிஷ் திருமண மண்டபத்திலும், ஊரக பகுதிகளுக்கான முகாம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அந்தூர் மற்றும் வரகூர் ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்களுக்கு அந்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. இம்முகாம்களில்1,592 மனுக்கள் பெறப்பட்டது. இதனைத்தொடர்ந்து 25.07.2025 (வெள்ளி) அன்று பூலாம்பாடி பேரூராட்சியில், வார்டு எண் 9 முதல் 15 வரை உள்ள பொதுமக்களுக்கு சீனிவாசா பெருமாள் கோயில் திருமண மண்டபத்திலும், ஆலத்தூர் ஊராட்சிக்குட்பட்ட செட்டிக்குளம், குரூர், மாவிலங்கை ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு செட்டிக்குளம் ஆத்திநாட்டார் திருமண மண்டபத்திலும், உங்களுடன் ஸ்டாலின் திட்டம் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம்கள் காலை 09.00 மணியிலிருந்து மதியம் 03.00 வரை நடைபெறும். எனவே பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக, தேவையான ஆவணங்களை இணைத்து முகாம் நடைபெறும் தினத்தன்று, முகாம்கள் நடைபெறும் இடத்திற்கு சென்று மேற்படி விண்ணப்பங்களை அளித்து அரசின் பல்வேறு சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்டத்தில் ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
Next Story