காரில் கடத்தி வந்த 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது

X
ஸ்ரீவைகுண்டம் அருகே காரில் 12 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த 2 பேரை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்திற்குள் போதைப் பொருள்கள் கடத்தி வரப்படுவதாக, மாவட்ட போதைப் பொருள் கடத்தல் நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள், ஸ்ரீவைகுண்டம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த கார் மற்றும் பைக்கை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த வாகனங்களில் கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கார், பைக்கையும், அவற்றில் 5 பண்டல்களில் இருந்த சுமார் 12 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள பெரும்பத்துவைச் சேர்ந்த ரமேஷ்(38), தோழப்பன்பண்ணையைச் சேர்ந்த உய்க்காட்டான்(42) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர்.
Next Story

