ஆரணி இ.பி.நகர் நகைக்கடையில் சுமார் 12 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போன சம்பவத்தில் 2 பேர் கைது.

ஆரணி இ.பி.நகர் நகைக்கடையில் சுமார் 12 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போன சம்பவத்தில் 2 பேர் கைது.
X
4கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்
ஆரணி, ஆரணி - வேலூர் நெடுஞ்சாலையில் இராட்டிணமங்கலம் இ.பி. நகர் பகுதியில் போளூர் ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் தலைவர் சாந்தி பெருமாள் என்பவர் பெருமாள் ஜுவல்லரி எனும் நகைக்கடையை நடத்தி வருகிறார் . வழக்கம் போல ஜுலை 25 அன்று இரவு கடை பூட்டிவிட்டு தொழிலாளர்கள் சென்றுவிட்டனர் . ஜூலை 26 அன்று கடையை திறப்பதற்காக தொழிலாளர்கள் வந்திருந்தனர் , அப்போது கடையின் உள்பகுதியில் ரேக்கில் இருந்த வெள்ளி பொருட்கள் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர் , மேலும் உடனடியாக உரிமையாளர் பெருமாளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது பெருமாள் பார்வையிட்டு ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன்பேரில் ஆரணி கிராமிய இன்ஸ்பெக்டர் அகிலன், எஸ்.ஐக்கள் மோகனா, அருண்குமார், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் குமரகுரு மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார் . மேலும் தி.மலை மாவட்ட எஸ்.பி சுதாகர் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் எஸ்.பி.சுதாகரின் மேற்பார்வையில், டிஎஸ்பி பாண்டீஸ்வரி தலைமையில் ஆரணி இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, வந்தவாசி இன்ஸ்பெக்டர் சுந்தரேசன், உதவி ஆய்வாளர்கள் ஷாபுதீன், கோவிந்தசாமி, எம்.அருண்குமார், ஆனந்தன், சிறப்பு உதவிஆய்வாளர்கள் சங்கர், கன்றாயன், குமரகுரு மற்றும் காவலர்கள் ஆகியோரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். மேலும் ஆரணி பகுதியில் உள்ள சிசி கேமராக்களை தொடர்ந்து ஆய்வு செய்து கொள்ளையர்கள் எந்த வழியாக சென்றனர் என்பதை கண்டுபிடித்து ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சித்தூர் மாவட்டம், அப்பையப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கட்டாட்சியம் மகன் பிரபு(42), சித்தூர் மாவட்டம், இந்திராநகர் சேர்ந்த ராமமூர்த்தி மகன் சரவணன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து சுமார் 4 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்தனர். மேலும் சித்தூர் மாவட்டம் சேர்ந்த வாசு மகன் சிரஞ்சீவி(30), ரவி மகன் தினேஷ்(25) ஆகிய 2 பேரும் இக்கொள்ளையில் உடன் இருந்ததை கண்டுபிடித்தனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு வழக்குகளில் சித்தூர் போலீஸார் கைது செய்துள்ளனர். ஆகையால் அவர்களிடம் விசாரணை நடத்த சித்தூர் தரப்பு போலீஸாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
Next Story