வாணியம்பாடி அருகே வீட்டின் பின்புற பூட்டை உடைத்து சுமார் 12 லட்சம் மதிப்பிலான 20 சவரன் நகை, பணம் கொள்ளை!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே டைலர் வீட்டின் பின்புற பூட்டை உடைத்து சுமார் 12 லட்சம் மதிப்பிலான 20 சவரன் நகை, பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் டைலர் முனுசாமி(70) இவரது மனைவி மகேஸ்வரி இவர்களுக்கு ஒரு மகள் உள்ள நிலையில் இன்று காலை முனுசாமி மற்றும் அவரது மகள் இருவரும் புத்துக்கோவில் பகுதியில் நடைபெறும் திருவிழாவிற்காக சென்றுள்ளனர் மேலும் வீட்டிலிருந்த முனிசாமியின் மனைவி மகேஸ்வரி வீட்டின் அருகில் உள்ள விவசாய நிலத்தில் கால்நடைகளுக்கு தீவனம் வைக்க சென்றுள்ளார் இதனை நோட்டமிட்டு வீட்டின் பின்புறமாக உள்ளே இறங்கிய மர்ம நபர்கள் பீரோவின் பூட்டை உடைத்து பீரோவில் மகள் திருமணத்திற்காக சேர்த்து வைக்கப்பட்டிருந்த சுமார் 12 லட்சம் மதிப்பிலான 20 சவரன் நகை மற்றும் 14 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர் சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற வாணியம்பாடி கிராமிய போலீசார் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story



