ஈரோடு, இடைப்பாடி செல்லும் இரண்டு பஸ்ஸும் கே. 1, கே.2 பயணிகள் குழப்பம் தீர, கே. 3, கே.4, என மாற்றம்

X
Komarapalayam King 24x7 |20 March 2025 6:05 PM ISTகுமாரபாளையத்திலிருந்து ஈரோடு, இடைப்பாடி செல்லும் இரண்டு பஸ்ஸும் கே. 1, கே.2 என இருப்பதால் பயணிகள் குழப்பமடைந்து வந்த நிலையில், பயணிகள் குழப்பம் தீர, கே. 3, கே.4, என மாற்றம் செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஈரோடு, சேலம், திருச்செங்கோடு, பவானி, சங்ககிரி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் செல்கின்றன. குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில், புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் துவங்கி நடந்து வருகிறது. இதனால் அம்மா உணவகம் அருகில் குறுகிய இடத்தில் செயல்பட்டு வரும் தற்காலிக பஸ் ஸ்டாண்டிலிருந்து அனைத்து பஸ்களும் சென்று வருகின்றன. குமாரபாளையத்திலிருந்து இடைப்பாடி செல்லும் டவுன் பஸ் எண் கே 1, கே.2 , குமாரபாளையத்திலிருந்து ஈரோடு செல்லும் டவுன் பஸ் எண் கே 1, கே.2 என உள்ளது. குறுகலான இடத்தில் பஸ்கள் நின்று இருப்பதால், பயணிகள் குழப்பமடைந்து மாறி உட்கார்ந்து கொள்ளும் நிலை ஏற்பட்டு வருகிறது. படித்தவர்கள் போர்டு பார்த்து ஏறி கொள்கிறார்கள். ஆனால் படிப்பறிவு இல்லாத எண்ணற்ற பேர், வேலைக்காக குமாரபாளையம் வந்து செல்வதால், அவர்கள் நெம்பர் மட்டும் பார்த்து ஏறிக்கொள்கிறார்கள். இதனால் பயணிகளுக்கும், ஓட்டுனர், மற்றும் நடத்துனர்களுக்கும் பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. வயதான பயணிகள் பஸ் மாறி, மாறி ஏறி, இறங்க பெரும் அவதிப்பட்டு வருவதால், பஸ் எண்களை மாற்றியமைக்க வேண்டி பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து பரிசீலனை செய்து பொதுமக்கள் கோரிக்கையடுத்து கே.3, கே.4, என மாற்றியமைக்கப்பட்டது.
Next Story
