திருத்தணியில் 120 போலீசாருக்கு இலவச மருத்துவ பரிசோதனை
Tiruvallur King 24x7 |30 Dec 2024 4:50 PM GMT
திருத்தணியில் 120 போலீசாருக்கு இலவச மருத்துவ பரிசோதனை
திருத்தணி, திருவாலங்காடு, கனகம்மாசத்திரம், ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு மற்றும் பொதட்டூர்பேட்டை ஆகிய போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் போலீசாருக்கு, இலவச மருத்துவ முகாம் நேற்று, திருத்தணியில் நடந்தது. திருத்தணி இன்ஸ்பெக்டர் மதியரசன் தலைமை வகித்தார். இதில், திருத்தணி டி.எஸ்.பி., கந்தன் பங்கேற்று, மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து சென்னை பாலாஜி மருத்துவமனை சார்பில், மருத்துவர் கியாஸ்முகமது மற்றும் மருத்துவ ஊழியர்கள் என, 10க்கும் மேற்பட்டோர் பங்கேற்று போலீசாருக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், கண் பரிசோதனை, ஈ.சி.ஜி., மற்றும் பொது மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. முகாமில், 120 போலீசாருக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கி, மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை மருத்துவமனையின் ஒருங்கிணைப்பாளர் அபிலேஷ் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
Next Story