தமிழக வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு 120 பயனாளி களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார்

தமிழக வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்  ராமச்சந்திரன் கலந்து கொண்டு 120 பயனாளி களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார்
X
அப்பையநாயக்கன் பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு 120 பயனாளி களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அப்பையநாயக்கன் பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு 120 பயனாளி களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார். மேலும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கிய பின் நிகழ்ச்சியில் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கே.கே எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுவது பெண்களுக்கான ஆட்சி என்றார். மேலும் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் தமிழகத்தில் செயல் படுத்தப்பட்டு வரும் வரும் கலைஞர் மகளிர் உரிமை தொகை வாங்காமல் விடுபட்டுப் போன பெண்களுக்கு என தனியாக முகாம் விரைவில் நடத்தப்படும் எனவும் அந்த முகாமில் பெண்கள் கலந்து கொண்டு விண்ணப்பம் செய்பவர்களின் மணுக்களை பரிசீலனை செய்து அவர்களுக்கு விரைவில் 1000 ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். பின்னர் நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கே.கே. எஸ்.எஸ். ஆர். இராமச்சந்திரன் என்று தமிழக முழுவதும் தமிழக முதல்வர் 1000 இடங்களில் முதல்வர் மருந்தகம் தொடங்கி வைத்தார் எனவும் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 27 முதல்வர் மருந்தகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் அதில் பத்து கடைகள் தனியாருக்கும் மீதமுள்ள 17 கடைகள் கூட்டுறவு துறை மூலம் திறக்கப்பட்டுள்ளது என்றார். இந்த முதல்வர் மருந்தகம் மூலம் ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். மேலும் சக்கரை ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு மிகக் குறைந்த விலையில் மருந்துகள் வழங்கப்படுகிறது என்றார். மேலும் எந்த ஒரு திட்டம் கொண்டு வந்தாலும் விமர்சனம் செய்பவர்கள் செய்து கொண்டு தான் இருக்கிறார் கள் எனவும் அவர்கள் கொண்டு வந்த திட்டத்தை முறையாக செயல்படுத்த வில்லை என குற்றம் சாட்டிய வருவாய் துறை அமைச்சர் நாங்கள் கொண்டு வந்த திட்டத்தை முறையாக செயல்படுகிறோம் என்றார். முதல்வர் மருந்தகம் தொடங்கியவர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது என்றார். மேலும் இன்று தமிழகம் முழுவதும் இன்று தொடங்கி வைக்கப்பட்டு உள்ள 1000 முதல்வர் மருந்தகம் திட்டம் மூலம் ஏராளமான இளைஞர் களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி இருக்கிறோம் என்றார்.
Next Story