ராஜபாளையத்தில் இருந்து கேரளாவில் உள்ள முக்கிய கோயில்களில் நடைபெறும் நிறைப்புத்தரிசி பூஜைக்காக 120 கட்டு நெற்கதிர்கள் கொண்டு செல்லப்பட்டது.*

ராஜபாளையத்தில் இருந்து கேரளாவில் உள்ள முக்கிய கோயில்களில் நடைபெறும் நிறைப்புத்தரிசி பூஜைக்காக 120 கட்டு நெற்கதிர்கள் கொண்டு செல்லப்பட்டது.*
X
ராஜபாளையத்தில் இருந்து கேரளாவில் உள்ள முக்கிய கோயில்களில் நடைபெறும் நிறைப்புத்தரிசி பூஜைக்காக 120 கட்டு நெற்கதிர்கள் கொண்டு செல்லப்பட்டது.*
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து கேரளாவில் உள்ள முக்கிய கோயில்களில் நடைபெறும் நிறைப்புத்தரிசி பூஜைக்காக 120 கட்டு நெற்கதிர்கள் கொண்டு செல்லப்பட்டது. கேரள மாநிலத்தில் ஆவணி மாதம் நடைபெறும் மலையாள புத்தாண்டு விழாவுக்கு முன்னதாக ஆடி மாதத்தில் முக்கிய கோயில்களில் நிறைப்புத்தரிசி பூஜை நடைபெறுவது வழக்கம். விவசாயம் செழிப்பதற்காக நெற்கதிர்கள் கோயிலில் வைத்து பூஜை செய்யப்பட்டு விவசாயிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும். முன்னதாக திருவாங்கூர் தேவசம்போர்டு தலைவராக இருந்த பிரையார் கோபாலகிருஷ்ணன் அனுமதி வழங்கியதன் பேரில் நிறைப்புத்தரிசி பூஜைக்கான நெற் கதிர்கள் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டு வருகிறது. அச்சன்கோயில், ஆரியங்காவு, குளத்துப்புழா, புனலூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோயில், ஆரண்முழா பார்த்தசாரதி கோயில், பந்தளம் ஐயப்பன் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் நிறைப்புத்தரிசி பூஜை நடைபெற உள்ளது. இதற்காக ராஜபாளையம் ஐயப்ப‌பக்தர்கள் குழு மற்றும் நாகராஜ் குழுவினர் சார்பில் 120 கட்டுகள் நெற்கதிர் கட்டப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. கட்டி வைக்கப்பட்ட கட்டுகள் அனைத்தும் 3 வாகனங்களில் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Next Story