மின்வாரிய தொழிலாளர்கள் மறியல் போராட்டம் : 120பேர் கைது!

X
தூத்துக்குடியில் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மின்வாரிய தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு நிரந்தரப்படுத்துதல் வேண்டும். தினக்கூலி ரூ.750-ஐ மின்சார வாரியமே வழங்கிட வேண்டும். 8.33 சதவீதம் போனஸ் வழங்கிட வேண்டும். மின்வாரிய தொழிலாளர்களுக்கு தமிழக அரசின் தெரிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் புதிய பேருந்து நிலையம் மேம்பாலம் அருகே மின்வாரிய தொழிற்சங்கங்கள் சார்பில் சிஐடியூ திட்டத் தலைவர் வை. பாலசுப்பிரமணியன் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. மறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உட்பட 120பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில தங்க வைத்தனர்.
Next Story

