ஈசநத்தம் புதூர் மயானம் அருகே பணம் வைத்து சூதாடிய நான்கு பேர் கைது. ரூ.1200 பறிமுதல்.
ஈசநத்தம் புதூர் மயானம் அருகே பணம் வைத்து சூதாடிய நான்கு பேர் கைது. ரூ.1200 பறிமுதல். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈசநத்தம் புதூர் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் ராஜசேர்வைக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஏப்ரல் 16ஆம் தேதி மாலை 6 மணி அளவில், ஈசநத்தம் புதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அருகில் உள்ள மயானம் அருகே பணம் வைத்து சூதாடுவது கண்டறியப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட கரூர், புத்தாம்பூர், வடுகப்பட்டி சேர்ந்த செல்வராஜ்,ஈசநத்தம் ஈவிபி புதூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ், காக்காவடி பிரிவை சேர்ந்த மணிவேல், குள்ளம்பட்டியைச் சேர்ந்த சக்திவேல் ஆகிய நான்கு பேரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூ.1,200 பறிமுதல் செய்தனர். பின்னர், நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்.
Next Story




