கோவை, கிணத்துக்கடவு தொகுதியில் 12,000 பேர் பெயர் இரட்டை பதிவு – எம்.எல்.ஏ தாமோதரன் குற்றச்சாட்டு
கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் சுமார் 12,000 வாக்காளர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இரண்டு முறை பதிவாகி உள்ளதாக அ.தி.மு.க எம்.எல்.ஏ தாமோதரன் குற்றம்சாட்டினார். இதே போன்று அனைத்து தொகுதிகளிலும் இருக்க வாய்ப்பு உள்ளதெனவும் அவர் தெரிவித்தார். கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்த அவர், தொகுதிக்குள் பெயர்கள் வேறு வார்டுகளில் இருமுறை பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும், இதை உடனடியாக சரிசெய்ய வேண்டும் எனவும் கோரினார். மேலும், வெள்ளளூர் குப்பை கிடங்கு பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வருவதால் குடிநீர் மாசடைந்து, தற்போது திருப்பூரிலிருந்தும் குப்பை கொண்டு வரப்படுவது பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், இதை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். அத்துடன், 1,200-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குச்சாவடிகள் மாற்றப்பட்டதில், தூரம் காரணமாக வாக்கு செலுத்த சிரமம் ஏற்படுகிறது என்றும், பூத் மற்றும் வாக்காளர் பட்டியல் சீரமைப்பு முறையாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Next Story



