எம்- சாண்ட், ஜல்லியை வாகனத்தில் எடுத்துச்செல்ல மின்னணு போக்குவரத்து நடைசீட்டு அமல் 12.06.2025 முதல் இணையதளம் மூலம் மட்டுமே வழங்கப்பட உள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தக

X
கனிமங்களை இருப்பு வைத்து வியாபாரம் செய்யும் அனைத்து உரிமையாளர்கள், முகவர்கள் சட்ட விதிகளின்படி கனிம இருப்பு கிடங்கு பதிவு சான்று பெறப்பட்டு, எம் சாண்ட், ஜல்லி போன்றவற்றுக்கு உரிய போக்குவரத்து நடைசீட்டு பெற்று எடுத்துச்செல்ல வேண்டும். இதன் தொடர்ச்சியாக எம் சாண்ட், ஜல்லி ஆகிய கட்டுமான பொருட்கள் எடுத்துச்செல்ல பயன்படுத்தப்பட்டு வந்த இலச்சினைகள் ஒட்டப்பட்ட போக்குவரத்து நடைசீட்டுகள் பயன்படுத்துவது நிறுத்தம் செய்யப்படுகிறது. தற்போது எம்- சாண்ட், ஜல்லி ஆகிய கட்டுமான பொருட்கள் எடுத்துச்செல்ல வழங்கப்படும் போக்குவரத்து நடைசீட்டு வருகிற 12.06.2025 தேதி முதல் www.mimas.tn.gov.in என்ற இணைய தளம் மூலமாக மின்னணு முறையில் மட்டுமே வழங்கப்படும். மின்னணு முறையில் வழங்கப்படும் போக்குவரத்து நடைசீட்டு மட்டுமே செல்லுபடியாகும். மேலும் மின்னணு முறையில் வழங்கப்பட்ட போக்குவரத்து நடைசீட்டு இல்லாமல் எம்- சாண்ட், ஜல்லி ஆகிய கனிமங்களை எடுத்து வரப்படும் வாகனங்கள் உரிய விதிகளின் படி பறிமுதல் செய்யப்பட்டு மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
Next Story

