பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 121 கிராம ஊராட்சிகளிலும் 29.03.2025 அன்று நடைபெறவுள்ளது.

X

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 121 கிராம ஊராட்சிகளிலும் 29.03.2025 அன்று கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கிராம சபைக்கூட்டத்தில் அனைத்து கிராம சபை உறுப்பினர்களும் தவறாது கலந்து கொண்டு, கிராமங்களுக்கு என்னென்ன தேவை என்பதை கேட்டறிதல் வேண்டும். பொதுமக்களுக்கு அரசு நலத்திட்டங்களை கூட்டத்தில் வழங்குதல்
உலக தண்ணீர் நாள் கிராம சபைக்கூட்டம் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 121 கிராம ஊராட்சிகளிலும் 29.03.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தகவல் உலக தண்ணீர் தினமான 22.03.2025 அன்று நடைபெறவிருந்த கிராம சபைக்கூட்டம் தமிழ்நாடு அரசின் நிர்வாக காரணங்களால் 29.03.2025 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 121 கிராம ஊராட்சிகளிலும் 29.03.2025 அன்று கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கிராம சபைக்கூட்டத்தில் அனைத்து கிராம சபை உறுப்பினர்களும் தவறாது கலந்து கொண்டு, கிராமங்களுக்கு என்னென்ன தேவை என்பதை கேட்டறிதல் வேண்டும். பொதுமக்களுக்கு அரசு நலத்திட்டங்களை கூட்டத்தில் வழங்குதல் வேண்டும். அரசு நிர்வாகத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் மக்களிடையே கேட்டறிதல் வேண்டும். மேலும், கிராம சபைக்கூட்டத்தில் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினைப்பற்றி விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், கலைஞரின் கனவு இல்ல பயனாளிகள் தேர்வு செய்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் இறுதி செய்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகள் இறுதி செய்தல், இதர பொருட்கள் ஆகிய கூட்டப்பொருட்கள் பற்றி விவாதிக்கப்படும். 29.03.2025 அன்று கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபைக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிராம சபா உறுப்பினர்கள் (கிராம ஊராட்சி வாக்காளர்கள்) அனைவரும் பங்கேற்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. அனைத்து துறை வாரியான அலுவலர்கள் தவறாது கிராம சபைக் கூட்டங்களில் கலந்து கொள்வதோடு, துறை தொடர்பான திட்டங்கள் பொதுமக்கள் நன்கு அறியும் வகையில் கூறிட வேண்டும். கிராம சபைக்கூட்டம் நல்ல முறையில் நடைபெறுவதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 29.03.2025 அன்று கிராம சபைக்கூட்டத்தில் கிராம சபா உறுப்பினர்களாகிய வாக்காளர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொண்டு கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்திற்கும், ஆக்கப்பூர்வமான ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சியில் இதர பொருட்கள் குறித்து விவாதித்திட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.
Next Story