கரூரில் கர்மவீரர் காமராஜர் 122 வது பிறந்தநாள் விழா.
கரூரில் கர்மவீரர் காமராஜர் 122 வது பிறந்தநாள் விழா. தமிழகத்தில் கல்விக்கு கண் கொடுத்த முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜர் 122 வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் எழுச்சி உடன் கொண்டாடி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கரூர் ஜவஹர் பஜார் முகப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கர்மவீரர் காமராஜர் சிலைக்குதமிழக நீதி கட்சியின் நிறுவனத் தலைவர் வாழவந்தியார் சரவணன் ஆலோசனையின் பேரில்,பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பாஸ்கரன் தலைவர் ஜெகன் முன்னிலையில் காமராஜர் முழு திரு உருவாய் சிலைக்கு மலர் மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில்கட்சியின் பொறுப்பாளர்கள் சாம்ராட் ரவிக்குமார், அருள் , முருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு காமராஜர் பிறந்தநாள் விழாவை சிறப்பித்தனர்.
Next Story





