காமராஜர் 123 –வது பிறந்தநாள் விழா

X
காமராஜர் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டில் கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபத்திலுள்ள திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடந்தது. மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தலைமை வகித்தார். அமைச்சர் மனோ தங்கராஜ் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் தமிழ்நாடு உணவு ஆணையத்தின் தலைவர் சுரேஷ் ராஜன், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தபா.ஜாண் ஜெகத் பிரைட், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Next Story

