கர்மவீரர் காமராஜரின் 123-வது பிறந்தநாள் விழா

X
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில், நாடார் உறவின் முறை சங்கம் மற்றும் காமராஜர் அறக்கடடளை சார்பில் முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜரின் 123-வது பிறந்தநாள் விழா சமுதாய தலைவர் அருளானந்தம் தலைமையில் நடைப்பெற்றது. விழாவின் சிறப்பு அழைப்பாளராக, திமுக கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளரும், வேளாங்கண்ணி பேரூராட்சி மன்ற துணைத் தலைவருமான தாமஸ் ஆல்வா எடிசன், பேராலய அதிபர் இருதயராஜ் அடிகளார், துணை அதிபர் அற்புதராஜ் அடிகளார், பேராலய பொருளாளர் உலகநாதன் அடிகளார், பேரூராட்சி தலைவர் டயானா சர்மிளா, பனங்காட்டு மக்கள் கழக வழக்கறிஞர் சிலுவை நாடார், நாடார் உறவு முறை சங்க தலைவர் ஸ்டாலின், திமுக பேரூர் செயலாளர் மரிய சார்லஸ், காமராஜர் அறக்கட்டளை தலைவர் ஏசுராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, 10 -ம் மற்றும் 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ரொக்க பரிசும், பதக்கமும் வழங்கி பாராட்டினர். விழாவில், அனைத்து சமுதாய நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story

