கரூர் மாவட்டத்தில் 123.90 மில்லி மீட்டர் மழை பதிவு.மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

கரூர் மாவட்டத்தில் 123.90 மில்லி மீட்டர் மழை பதிவு.மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
கரூர் மாவட்டத்தில் 123.90 மில்லி மீட்டர் மழை பதிவு.மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது, கரூர் மாவட்டத்தில் கடந்த வாரம் தொடர்ந்து ஐந்து நாட்கள் மழை பெய்த நிலையில் மீண்டும் வெய்யில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் நேற்று மதியம் 3- மணியிலிருந்து இரவு வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. அது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கரூரில் 8.20 மில்லி மீட்டர் க.பரமத்தியில் 12 மில்லி மீட்டர் தோகை மலையில் 21 மில்லி மீட்டர் கிருஷ்ணராயபுரத்தில் 21.50 மில்லி மீட்டர் மாயனூரில் 17 மில்லி மீட்டர் பஞ்சபட்டியில் 17.60 மில்லி மீட்டர் கடவூரில் 4 மில்லி மீட்டர் பாலவிடுதியில்12 மில்லி மீட்டர் மைலம்பட்டியில் 10.60 மில்லி மீட்டர் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 123.90 மில்லி மீட்டர் எனவும் இதனுடைய சராசரி அளவு 10.33 மில்லி மீட்டர் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Story