நீலகிரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வசந்த் அண்ட் கோ நிறுவனத்தின் 124வது கிளை உதகையில் இன்று திறக்கபட்டது

X
பிரசித்தி பெற்ற வசந்த் அண்ட் கோ நிறுவனத்தின் 124வது கிளை உதகையில் இன்று திறக்கபட்டது. அதனை வசந்த் அண்ட் கோ நிறுவனத்தின் உரிமையாளரும் வசந்த் தொலைகாட்சி இயக்குனருமான திரு.வினோத் வசந்தகுமார் அவர்கள் திறந்து வைத்தார்.......... *தமிழகத்தில் வீட்டு உபயோக பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் செல்போன்கள் விற்பனையில் முன்னனி நிறுவனமாக வசந்த் அண்ட் கோ திகழ்ந்து வருகிறது. கோவை, சென்னை, மதுரை, திருச்சி என தமிழகத்தில் உள்ள பெருநகரங்கள் அனைத்திலும் வசந்த் அண்ட் கோவின் கிளைகள் உள்ள நிலையில் மலை மாவட்டமான நீலகிரியில் உள்ள உதகையில் இன்று புதிய கிளை திறக்கபட்டது. உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே லோயர்பஜார் சாலையில் அந்த நிறுவனத்தின் 124-வது கிளை திறக்கபட்டது. புதிய கிளையை வசந்த் அண்ட் கோ நிறுவனத்தின் உரிமையாளரும் வசந்த் தொலைகாட்சி இயக்குனருமான திரு.வினோத் வசந்தகுமார் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.இந்த விழாவில் உள்ளூர் வணிகர்கள்,அரசியல் பிமுகர்கள்,பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திரு. வினோத் வசந்தகுமார்: உதகையில் வசந்த் அண்ட் கோவின் 124 வது கிளை திறக்கப்பட்டுள்ளதாகவும் இன்று 20,000 க்கு மேல் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு தங்க நாணயம் வழங்கப்படும் என்றும் நீலகிரி மாவட்ட மக்கள் பொருட்களை வாங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொண்டார். இந்த புதிய கிளையில் பல ரகங்களில் தொலைகாட்சி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களும் மொபைல், லேப்டாப் என பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களும் வைக்கப்பட்டுள்ளன. பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு எளிமையான தவணை முறையில் விற்பனை செய்யபடுகிறது.
Next Story

