கண்ணமங்கலத்தில் தடகள போட்டிகள் 1242 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.பிடிஏ உறுப்பினர் பலராமன், எஸ்ஐ பலராமன் பங்கேற்பு

கண்ணமங்கலத்தில் தடகள போட்டிகள் 1242 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.பிடிஏ உறுப்பினர் பலராமன், எஸ்ஐ பலராமன் பங்கேற்பு
X
ஆரணி ஆக.29 கண்ணமங்கலம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் செய்யாறு கல்வி மாவட்டம் சார்பில் ஆரணி குறுவட்ட அளவிலான தடகள போட்டிகள் இன்று நடைபெற்றது.
கண்ணமங்கலம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் செய்யாறு கல்வி மாவட்டம் சார்பில் ஆரணி குறுவட்ட அளவிலான தடகள போட்டிகள் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியை ரேவதி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் கோவர்த்தனன், ரவி, பிடிஏ உறுப்பினர் கொளத்தூர் பலராமன், சப் இன்ஸ்பெக்டர் பலராமன் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி ஆசிரியர் பாபிபால்வதனிபிரேமகுமாரி வரவேற்றார். நிகழ்ச்சியில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றி விளையாட்டு போட்டிகள் தொடங்கி வைக்கப்பட்டது. பின்னர் முக்கிய பிரமுகர்கள் தேசிய கொடி, விளையாட்டு கொடிகளை ஏற்றி வைத்தனர். இதனை தொடர்ந்து 100 முதல் 3ஆயிரம் மீட்டர் வரையிலான பல்வேறு தடகள போட்டிகள், லாங் ஜம்ப், ஹை ஜம்ப் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன. இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு விருதும் சான்றிதழும் வழங்கப்பட்டன. இன்று நடைபெற்ற போட்டியில் 582 மாணவிகள் பங்கேற்றனர். நாளை நடைபெற உள்ள போட்டிகளில் 660 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். ஆரணி ஒன்றியத்திற்கு உட்பட்ட 42 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 1242 மாணவ மாணவிகள் இப்போட்டிகளில் பங்கேற்றனர். இந்த விளையாட்டு போட்டிகள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்த கிடைத்த வாய்ப்பாகவும், இதன்மூலம் தேசிய விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் மாணவ மாணவிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
Next Story