கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் சிறப்பு முகாமில் 12,615 மனுக்கள் பதிவு.
Karur King 24x7 |19 Nov 2024 7:38 AM GMT
கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் சிறப்பு முகாமில் 12,615 மனுக்கள் பதிவு.
கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் சிறப்பு முகாமில் 12,615 மனுக்கள் பதிவு. இந்தியாவில் பிறந்த 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவரும் நடைபெறும் ஜனநாயக தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு செய்துள்ளது. இதற்கு ஒவ்வொரு வாக்காளரும் தங்களது புகைப்படத்துடன் கூடிய பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். ஜனவரி 1, 2025 ம் ஆண்டு அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், அல்லது 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி முன் வரை பிறந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய தகுதியானவர்கள். அவ்வாறு தகுதி இருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6-ம், பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம் 7-ம், குடியிருப்பை மாற்றுவதற்கும், நடப்பு வாக்காளர்கள் பட்டியில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்வதற்கும், மாற்றுதிறனாளி வாக்காளர் புகைப்படம் அடையாள அட்டை பெறுவதற்கும், மற்றும் மாற்றுத்திறனாளிகளை குறிப்பதற்கும் படிவம் 8-ஐ பயன்படுத்த வேண்டும் என அறிவிப்பு செய்து, இதற்காக கரூர் மாவட்டத்தில் நவம்பர் 16, 17 தேதிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முகாம்களை நடத்தியது. இந்த முகாமில் படிவம் 6-ய் பூர்த்தி செய்து 6,447 பேரும், படிவம் 6 பி பூர்த்தி செய்து 18 பேரும், படிவம் 7ஐ பூர்த்தி செய்து 1906 பேரும், படிவம் 8ஐ பூர்த்தி செய்து 4244 பேரும் மனுக்களாக அளித்துள்ளனர். இவ்வாறு அளிக்கப்பட்ட மொத்த மனுக்களின் எண்ணிக்கை 12,615 என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் வரும் நவம்பர் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் மீண்டும் அதே வாக்கு சாவடி மையங்களில் இரண்டாவது முறையாக சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி கொண்டு தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Story