கரூர் 1275 பயனாளிகளுக்கு விலை இல்லா வீட்டுமனை பட்டா வழங்கிய செந்தில் பாலாஜி.
கரூர் 1275 பயனாளிகளுக்கு விலை இல்லா வீட்டுமனை பட்டா வழங்கிய செந்தில் பாலாஜி. கரூர் அடுத்த வெண்ணைமலை பகுதியில் உள்ள தனியார் கூட்டரங்கில் விலை வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் அமைச்சர்செந்தில் பாலாஜி கரூர் மாவட்டம் மன்மங்கலம் வட்டத்தைச் சேர்ந்த ஆண்டாங் கோவில் கிழக்கு, மேற்கு , கருப்பம்பாளையம் , அப்பிபாளையம் , பள்ளபாளையம் , தாளப்பட்டி , மின்னாம்பள்ளி , நெருர் வடக்கு , நெரூர் தெற்கு , அம்சமாபுரம் ,சோமூர் , பஞ்சமாதேவி , ஆத்தூர் ,காதப்பாறை ,மண்மங்கலம், கோயம்பள்ளி , குப்பிச்சிபாளையம் , நன்னியூர்,புஞ்சை கடம்பன்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பயனாளிகள் 1275 பேருக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாக்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் செந்தில் பாலாஜி.பட்டாக்களை பெற்றுக் கொண்ட பயனாளிகள் அரசுக்கும்,செந்தில் பாலாஜிக்கும் நன்றி தெரிவித்தனர்.இது தொடர்பான வீடியோவை கரூர் செய்தி மக்கள் தொடர்பு துறை வெளியிட்டுள்ளது.
Next Story






