கரூர்-சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 128 வது பிறந்தநாள் விழா.

கரூர்-சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 128 வது பிறந்தநாள் விழா.
கரூர்-சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 128 வது பிறந்தநாள் விழா. "நேதாஜி" என்று இந்திய மக்களால் அழைக்கப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் 128 வது பிறந்தநாள் இன்று. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர். 1897 ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி பிறந்த இவர், இரண்டாம் உலகப்போரில் வெளிநாடுகளில் போர் கைதிகளாக இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்று திரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராக தாக்குதல் நடத்தியவர். ஆண்டுதோறும் அவரது பிறந்தநாளை பல்வேறு அமைப்பினர் கொண்டாடி வருகின்றனர். இன்று சென்னையில் தமிழக அரசின் சார்பில் அவரது திருவுருவப்படத்திற்கு அமைச்சர்கள் மலர் மாலை அணிவித்து மலர்கள் தூவி வீரவணக்கம் செலுத்தினர். இதேபோல, தமிழகத்தில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இன்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். இதனை தொடர்ந்து கரூர் மார்க்கெட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் திருவுருவ சிலைக்கு அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் சம்பத் தலைமையில் மலர் மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட தொழிற்சங்க தலைவர் பாலுசாமி உள்ளிட்ட அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
Next Story