அவிநாசியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 128 வது பிறந்தநாள் விழா

அவிநாசியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 128 வது பிறந்தநாள் விழா
X
அவிநாசியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 128 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்ட நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் 128 வது பிறந்தநாள் விழா தேசபக்தி தின விழாவாக அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி யின் சார்பில் கொண்டாடப்பட்டது. அவிநாசி புதிய பேருந்து நிலையம், திருமுருகன்பூண்டி மற்றும் அனைப்புதூர் பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் கொடியேற்றி, அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டதுடன், பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
Next Story