கடத்தி வரப்பட்ட 129 மதுப்பாட்டில்கள் பறிமுதல்
Dindigul King 24x7 |6 Jan 2025 5:26 AM GMT
பாண்டிச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 129 மதுப்பாட்டில்கள் பறிமுதல், போலீஸ்காரர் உட்பட இருவர் கைது
பாண்டிச்சேரியிலிருந்து திண்டுக்கல்லை அடுத்த நத்தத்தில் விற்பனை செய்யவதற்காக மதுப்பாட்டில்கள் கடத்தி வருவதாக திண்டுக்கல் மதுவிலக்கு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நத்தம் மூங்கில்பட்டி அருகே வாகன சோதனை மேற்கொண்ட போலீசார் அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது காரில் இருந்த நத்தத்தை சேர்ந்த முத்துக்குமார் ( இவர் தற்போது சென்னையில் காவலராக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது) மற்றும் அழகு பாண்டி என்பவர்களிடமிருந்து 129 மதுபான பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மதுவிலக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீஸ்காரர் ஒருவர் மது பாட்டில் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story