வாணியம்பாடி அருகே 1.29 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்க பூமி பூஜை செய்த சட்டமன்ற உறுப்பினர்கள்*.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 1.29 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்க பூமி பூஜை செய்த சட்டமன்ற உறுப்பினர்கள். திமுக மாவட்ட செயலாளர் முன்னிலையில் அதிமுகவிலிருந்து, திமுகவில் இணைந்த ஊராட்சி மன்றத்துணைத்தலைவர்*.. திருப்பத்தூர் மாவட்டம்வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட மதானஞ்சேரி ஊராட்சியில், நபார்ட்டு திட்டத்தின் கீழ் 1 கோடியே 29 லட்சத்து, 96 ஆயிரம் ரூபாய் மதிப்பில், மதானஞ்சேரி முதல் சங்கத்து வட்டம் பகுதி வரை புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், ஆலாங்காயம் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் ஞானவேலன் ஆகியோர் பூமி பூஜை செய்து தார் சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்தனர். அப்பொழுது, மதனாஞ்சேரி ஊராட்சி மன்ற துணைத்தலைவரும், அதிமுக நிர்வாகியுமான வெங்கடேசன் என்பவர் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும், திருப்பத்தூர் திமுக மாவட்ட செயலாளருமான தேவராஜ் முன்னிலையில், திமுகவில் இணைந்தார்..அவரை திமுக சால்வை அணிவித்து, சட்டமன்ற உறுப்பினர்கள் தேவராஜ் மற்றும், வில்வநாதன் ஆகியோர் கட்சியில் இணைத்துக்கொண்டனர்..
Next Story



