மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில் ரூ.12.96 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில் ரூ.12.96 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
X
மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில் ரூ.12.96 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
அரியலூர், மே 15 - அரியலூர் மாவட்டம், வெண்மான்கொண்டான், கருப்பிலாக்கட்டளை, திருமானூர், அன்னிமங்கலம், கீழக்காவட்டாங்குறிச்சி ஆகிய ஊராட்சிகளில் புதன்கிழமை நடைபெற்ற மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில், 2,204 பயனாளிகளுக்கு ரூ.12.96 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேற்கண்ட கிராமங்களில் நடைபெற்ற முகாம்களில், பங்கேற்ற தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆகியோர் , 2,204 பயனாளிகளுக்கு ரூ.12.96 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அப்போது, அமைச்சர் சி.வி.கணேசன் பேசியது: இந்த முகாம்கள் மூலம் பொதுமக்களிடமிருந்து 1,097 மனுக்கள் பெறப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.தமிழக முதல்வர் மக்களை தேடி சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து, மனுக்களை பெறுவதுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டதன் அடிப்படையில் இந்த முகாம்கள் நடைபெறுகிறது. இதன் மூலம் மனுக்களின் மீது 30 நாள்களுக்குள் தீர்வு காணலாம் என்றார். முகாம்களுக்கு ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமை வகித்தார். சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ரா.மல்லிகா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரா.சிவராமன், வருவாய் கோட்டாட்சியர்கள் கோவிந்தராஜ், ஷீஜா மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். :
Next Story