கன்னியாகுமரி ரயிலில் கடத்தி வந்த 13 கிலோ கஞ்சா பறிமுதல்
Nagercoil King 24x7 |27 Dec 2024 9:40 AM GMT
விசாரணை
கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலம் திப்ருகாருக்கு தினசரி ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு கன்னியாகுமரி வந்த ரயிலில் பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற பின்னர் ஊழியர்கள் ரயிலை சுத்தம் செய்யும் பணியில் இருந்தனர். அப்போது பெட்டியில் உள்ள ஒரு கழிவறை மேற்கூரையில் ஏதோ பார்சல் இருப்பதை ஊழியர்கள் கவனித்தனர். மேற் கூரையை வெட்டி எடுத்து பார்சல்களை வைத்து தனியாக ஸ்குரு வைத்து முறுக்கி இருந்தனர். இதையடுத்து ரயில்வே போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பின்னர் மேற்கூரை உடைத்து பார்த்த போது மொத்தம் 14 பார்சல்கள் இருந்ததாக கூறப்படுகிறது. மொத்தம் 13 கிலோ கஞ்சா இருந்ததாக தெரிகிறது. இவற்றை கைப்பற்றி நாகர்கோவில் உள்ள ரயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போதைப்பொருள் தடுப்பு நுண்ணுறிவு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story