ஏலகிரி மலை 13வது கொண்டை ஊசி வளைவில் சுற்றுலா வந்த வேன் கவிழ்ந்து விபத்து*

X
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை 13வது கொண்டை ஊசி வளைவில் சுற்றுலா வந்த வேன் கவிழ்ந்து விபத்து* காஞ்சிபுரத்தை சேர்ந்த 14 பேர் புத்தாண்டை முன்னிட்டு ஏலகிரி மலைக்கு சுற்றுலா செல்வதற்காக இன்று சுற்றுலா வேனில் ஏலகிரி மலைக்கு வந்தனர். ஏலகிரி மலையில் பல்வேறு இடங்களில் சுற்றி பார்த்து விட்டு பின்னர் மலை உச்சியில் இருந்து அடிவாரம் நோக்கி வந்தனர். அப்போது 13 வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது சுற்றுலா வேன் கட்டுப்பாட்டை இழந்து பாறை மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுற்றுலா பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக எந்த ஒரு காயமின்றி உயிர் தப்பினர். இருப்பினும் காஞ்சிபுரத்தை சேர்ந்த வேன் டிரைவர் பார்த்தசாரதிக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவரை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு ஏலகிரி மலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று சென்றனர். இது குறித்து ஏலகிரி மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

