ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளி போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைப்பு..*

X
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளி போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைப்பு.. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அத்திகுளம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் வயது 53 இவர் தனியார் மில்லில் கூலி வேலை செய்து வருகிறார்.இவர் கடந்த 25 ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த 13 வயதான ஏழாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் சிறுமி அவரது தாயிடம் தெரிவித்த நிலையில் இதுகுறித்து சிறுமியின் தாய் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரியின் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் காவல் துறையினர் செல்வராஜ் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.பின்னர் தீவிர விசாரணை மேற்கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு விருதுநகர் சிறையில் செல்வராஜை அடைத்தனர்.ஸ்டாலின்ஆட்சியில் சிறுமிகளுக்கு பாதுகாப்பில்லை எனவும் பாலியல் தொல்லைகள் தொடர்ந்து நடைபெற்று வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
Next Story

