ஊரக வளர்ச்சி துறை மாவட்ட மாநாட்டில் 13 தீர்மாணங்கள் நிறைவேற்றம்.
ஊரக வளர்ச்சி துறை மாவட்ட மாநாட்டில் 13 தீர்மாணங்கள் நிறைவேற்றம். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஏழாவது மாவட்ட மாநாடு கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆர்த்தி ஹோட்டலில் மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர் மகேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் வினோத்குமார், மாவட்ட இணை செயலாளர் கற்பகவள்ளி, மாநில செயலாளர் வீரக்கடம்பு கோபு, மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட பொருளாளர் தமிழ் வாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பத்தாண்டுகளுக்கு மேலாக பணி முடித்த தொழில் நுட்ப உதவியாளர்களை ஊராட்சி ஒன்றியங்களில் பதிவரை எழுத்தராகவும் பணிவரன்முறைபடுத்த வேண்டும். கலைஞர் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது நீக்கும் திட்டத்திற்கு புதிய பணியிடங்களை ஏற்படுத்தித் தர வேண்டும். கிராம ஊராட்சிகளை பேரூராட்சி நகராட்சி மற்றும் மாநகராட்சியுடன் இணைக்கும் நடவடிக்கைகளை கைவிட்டு, அத்தகைய ஊராட்சிகளை பிரிக்க வேண்டும் உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Next Story




