நீலகிரியில் 13 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறப்பு....

நீலகிரியில் 13 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறப்பு....
X
நீலகிரியில் 13 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறப்பு....
நீலகிரியில் 13 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறப்பு.... நீலகிரி மாவட்டத்தில் 13 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டன. தமிழ்நாடு முதலமைச்சா்‌ சென்னையில்‌, தமிழ்நாடு முழுவதும்‌ மருந்தகங்களைத்‌ முதல்வர் தொடங்கி வைத்தார்‌. நீலகிரி மாவட்டத்தில்‌ என்சிஎம்எஸ் வளாகத்தில்‌ நடைபெற்ற முதல்வர்‌ மருந்தகத்திறப்பு விழாவில்‌ தமிழ்நாடு அரசின்‌ தலைமைக்கொறடா கா.ராமசந்திரன் தலைமை வகித்தார்‌. நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா முன்னிலை வகித்தார்‌. நீலகிரி மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள்‌ மற்றும்‌ நீலகிரி மாவட்டத்தின்‌ அரசு அலுவலலர்கள் உட்பட பலர்‌ கலந்து கொண்டனர். பி.பாரம்‌/டி.பாரம்‌ படித்துள்ள மாணவர்களை தொழில்‌ முனைவோர்களாக மாற்றுவது, பொதுமக்களுக்கு மிகக்‌ குறைந்த விலையில்‌ 20% முதல்‌ 90% வரை மருந்துகளை விற்பனை செய்வது ஆகியவை முதல்வர்‌ மருந்தகத்தின்‌ முதன்மையான நோக்கங்களாகும்.நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால் தோட்ட தொழிலாளர்கள்,சுற்றுலா தொழிலாளர்கள்,பழங்குடியினர்கள்  உட்பட ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் திட்டத்தை கொண்டு வந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு மலைவாழ் மக்கள் நன்றி தெரிவித்தனர்.
Next Story