திருப்பத்தூரில் பீடி தொழிலாளர்களின் கூலி 13 உயர்வுக்கான அரசாணையை வெளியிட வலியுறுத்தி தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்*
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் பீடி தொழிலாளர்களின் கூலி 13 உயர்வுக்கான அரசாணையை வெளியிட வலியுறுத்தி தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு INTUC,AITUC, LPF ஆகிய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தில் உள்ள பீடி தொழிலாளர்களின் கூலி ரூபாய் 13 உயர்வுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட வலியுறுத்தி மாநில செயலாளர் மணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் அரசாணை வெளியிடாத காரணத்தால் உயர்ந்துள்ள ரூபாய் 13ஐ கிருஷ்ணகிரியில் உள்ள ஓம் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் திருநெல்வேலி முருகா ஓம் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய பீடி நிறுவனங்கள் உயர்வுக்கான கூலியை வழங்காமல் மறுத்து வருகிறது எனக் கூறியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Next Story



