திருப்பத்தூர் அருகே 13 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

திருப்பத்தூர் அருகே 13 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
X
திருப்பத்தூர் அருகே 13 வயது சிறுவன் ஏரியில் நீரில் மூழ்கி உயிர் இழப்பு
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஏரியில் குளிக்க சென்ற 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட நான்காவது வார்டு முத்துசாமி தெரு பகுதியில் வசிப்பவர் பாபு இவரது மனைவி அம்பிகா இவர்களுக்கு 6 பெண் பிள்ளைகள் இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளன மொத்த குடும்பத்தாரும் பெங்களூர் பகுதியில் குடிப்பெயர்ந்து வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பத்தூர் பகுதியில் உள்ள உறவுக்காரர்கள் வீட்டிற்கு திருவிழாவிற்கு வந்து அங்கேயே தன்னுடைய மகள் திருமணத்தை முடித்து இங்கேயே தங்கி இருந்த நிலையில்.. இவர்களது மகன் ஆர்யா வயது (12) கர்நாடகா மாநிலம் பெங்களூர் பகுதியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தவர் இந்நிலையில் இவரது நண்பர்களை அழைத்துக் கொண்டு ஜோலார்பேட்டை ஒன்றியம் கருப்பனூர் ஊராட்சிக்குட்பட்ட செல்லக்குட்டை ஏரியில் நீச்சல் அடிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது களிமண் நிறைந்து சேரும் சகதியமாக இருந்த ஏரியில் சிக்கி ஆர்யா மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டன திருவிழாவிற்கு வந்து அக்காவின் திருமணத்தை முடித்து ஒரே நாளில் தம்பி சக நண்பர்களுடன் சேர்ந்து ஏரியில் குளிக்கச் சென்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
Next Story