காஞ்சிபுரத்தில் வரும் 13ல் வேலை வாய்ப்பு முகாம்

X

காஞ்சிபுரம் வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில், வரும் 13ம் தேதி, காலை 9:30 மணிக்கு, வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம் வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில், வரும் 13ம் தேதி, காலை 9:30 மணிக்கு, வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்டத்தில், வரும் 13ம் தேதி, காஞ்சிபுரம் கலெக்டர் வளாகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில், காலை 9:30 மணிக்கு நடைபெற உள்ளது. தனியார் நிறுவனங்கள், 1,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு நடத்த உள்ளனர். பட்டதாரிகள், டிப்ளமோ, ஐ.டி.ஐ.,, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு படித்தவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். எனவே, 18 - 35 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம். மேலும், விபரங்களுக்கு 044 -27237124 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story