ஊத்தங்கரை அருகே ஆய்வாளரை தாக்கிய 13 பேர் கைது.

ஊத்தங்கரை அருகே ஆய்வாளரை தாக்கிய  13 பேர் கைது.
X
ஊத்தங்கரை அருகே ஆய்வாளரை தாக்கிய 13 பேர் கைது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கல்லாவி அடுத்த ரெட்டிப்பட்டி கோவில் விழாவின் போது சிலர் பட்டாசுகளை அந்த வழியாக வந்த பள்ளி வாகனம் மீது சிலர் பட்டாசுகளை வீசிய தொடர்பாக கல்லாவி போலீஸ் ஆய்வாளர்ஜாபர் உசேன் மற்றும் போலீசார் சிலரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். அப்போது பொதுமக்களில் சிலர் போலீசாரிடம் தகராறு செய்தனர். அப்போது இன்ஸ்பெக்டர் ஜாபர் உசேன் மீது கல்லை வீசி தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இது குறித்து தனியார் பள்ளி பஸ்சின் டிரைவர் சண்முகம் கொடுத்த புகாரின் பேரில் கல்லாவி போலீசார் ஏ.ரெட்டிப்பட்டியை சேர்ந்த வல்லரசு என்கிற அருண், சம்பத், லோகேஷ், இளவரசன், பூவரசன், கருணாகரன், விஜய், ஆறுமுகம், தினேஷ், மாதையன், மணிகண்டன், கிரி, மற்றும் லோகேஷ் ஆகிய 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
Next Story